• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

மிக அதிக விலை எதிர்பார்க்கப்படும் டி.ரெக்ஸ் படிமம் – என்ன காரணம்?

Byadmin

Jul 13, 2026


டி. ரெக்ஸ், டைனோசர், புதைபடிவங்கள், அகழ்வாராய்ச்சி

பட மூலாதாரம், Matthew Sherman

    • எழுதியவர், எஸ்மே ஸ்டாலர்ட்
    • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் துறை மூத்த செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1997ஆம் ஆண்டில், சோதெபிஸ் ஏல நிறுவனம் நமது வரலாற்றுக்கு முந்தைய உலகின் அதிசயங்களை விற்பனை செய்வதற்கான ஓர் இயற்கை வரலாற்று ஏலத்தை நடத்தியது. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டைனோசரும் சேர்க்கப்பட்டிருந்தது.

இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான நிகழ்வாக இருந்தது; தங்கள் சேகரிப்புகளில் சேர்ப்பதற்காக மாதிரிகளைத் தேடும் உலகின் அருங்காட்சியகங்கள் இதில் பெரும்பாலும் கலந்துகொண்டன.

அங்கு ஏலத்திற்கு வந்த டைனோசர் ‘சூ’ என்று அழைக்கப்படும் ஒரு டைரனோசொரஸ் ரெக்ஸ் ஆகும்; இது இறுதியில் சிகாகோவில் உள்ள ஃபீல்ட் அருங்காட்சியகத்திற்கு 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் செவ்வாய்க்கிழமை வருடாந்திர ஏலத்தில் மற்றொரு டி. ரெக்ஸ் காட்சிப்படுத்தப்பட உள்ளது; இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகவும் முழுமையான வடிவத்தைக் கொண்ட மாதிரிகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த முறை டைனோசர்களைத் தேடுவது விஞ்ஞானிகள் மட்டுமல்ல, உலகின் பெரும் பணக்காரர்களும் தான்.

By admin