• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

முருகன் அருளும் ஆறுபடை வீடுகள்…

Byadmin

Jul 13, 2026


திருப்பரங்குன்றம்

முருகன், தெய்வானையை மணந்து திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். மதுரையில் உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வழிபடுவது சிறப்பு.

திருச்செந்தூர்

கடற்கரையில் அமையப்பெற்ற தலம். முருகன் சூரனை வென்று போர் புரிந்த தலம். பகைவர்கள் தொல்லை விலகி நிம்மதி அடைய இங்கு செல்வது சிறப்பு.

பழனி

ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக முருகன் காட்சி தருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. தீயசக்திகள் விலக இங்கு செல்வது வழக்கம்.

சுவாமிமலை

சிவபெருமானுக்கு ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை முருகன் உபதேசித்த இடம்.
கும்பகோணத்தில் உள்ளது. கல்வி வளம் பெற இங்கு செல்வது சிறப்பு.

திருத்தணி

போர் முடிந்து, கோபம் தணிந்து சாந்தமான நிலையில் முருகன் அருள்பாலிக்கிறார். சென்னைக்கு அருகே அமைந்துள்ளது. காதல் கைகூடிடவும் மனம் நிம்மதி அடையவும் இங்கு செல்லலாம்.

பழமுதிர்ச்சோலை

முருகன் , ‘சுட்ட பழம் வேண்டுமா?’ என்று ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்த தலம். மதுரைக்கு அருகே உள்ளது.

By admin