• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றியின் விளம்பில் இந்திய மகளிர் அணி

Byadmin

Jul 13, 2026


இந்தியா அபாரம்:

அடுத்து ஆடிய இங்கிலாந்து, தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்திருந்தது. இதில் ஸ்மிருதி மந்தனா (69), யஸ்திகா (39) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

3-ஆம் நாளில் ஸ்மிருதி மந்தனா (70) அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3) வெளியேறினார். தொடர்ந்து ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (16), தீப்தி சர்மா (10) எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய யஸ்திகா சதம் விளாசினார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன்களை எடுத்த போது டிக்ளேர் செய்து 456 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் ரிச்சா கோஷ் (50), சயாலி (18) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

By admin