• Mon. Jul 13th, 2026

24×7 Live News

Apdin News

தினசரி 12 மணி நேர விரதம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? 6 முக்கிய விஷயங்கள்

Byadmin

Jul 13, 2026


ஆரோக்கியம், 12 மணிநேர உண்ணாவிரதம், உபவாசம், உடல் எடை குறைப்பு, உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

‘குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டும் உணவு உட்கொள்ளுதல்’ என்பது இடைநிலை உண்ணாவிரதத்தின் (intermittent fasting) ஒரு வகையாகும்; உடல் எடையைக் குறைக்கப் பலர் இம்முறையைப் பின்பற்றுகின்றனர்.

இம்முறை உடல் எடையைக் குறைப்பதில் பெரிய அளவில் பலனளிக்காது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? என்பதைத் தெரிந்துக்கொள்வோம்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டும் உணவு உட்கொள்ளும் முறையில், ஒரு நாளில் உட்கொள்ளும் இரண்டு வேளை உணவுகளுக்கு இடையே குறைந்தது 12 மணிநேர இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; இந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பது சிறந்தது.

உதாரணமாக, இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தை இது குறிக்கிறது என்று சர்ரே பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை இணைப் பேராசிரியரான டாக்டர் ஆடம் காலின்ஸ் கூறுகிறார்.

‘இடைவெளி விட்டு உண்ணும் முறையில்’ வேறு சில வகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று ‘5:2’ முறையாகும்; இதில் வாரத்தில் 2 நாட்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்ள வேண்டும். மீதமுள்ள 5 நாட்களில் வழக்கம்போல் சாப்பிடலாம்.

By admin