• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா தரும் நெருக்கடியை ரஷ்யா, சீனா உதவியுடன் கியூபா எதிர்கொள்வது எப்படி?

Byadmin

May 25, 2026


கியூபா, டொனால்ட் டிரம்ப், அமைதி உடன்பாடு, அமெரிக்கா - கியூபா உறவு, எண்ணெய் முற்றுகை, பொருளாதாரத் தடைகள், ராவுல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், Pablo PORCIUNCULA and SAUL LOEB AFP via Getty Images

படக்குறிப்பு, கியூபா அதிபர் மிகுவெல் டயஸ்-கானெல் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

    • எழுதியவர், பாஸ்கல் பிளெட்சர்
    • பதவி, லத்தீன் அமெரிக்க நிபுணர், பிபிசி மானிட்டரிங்
    • எழுதியவர், டங்கன் வாக்கர்

    • எழுதியவர், அலிசியா கரி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பல தசாப்தங்களாக பதற்றமாகவும் பலவீனமாகவும் இருந்துவரும் அமெரிக்கா – கியூபா இடையிலான உறவு, சமீபத்திய வாரங்களில் மிக வேகமாக மோசமடைந்து வருகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கியூபா அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

கியூபா மீது எண்ணெய் முற்றுகை, பொருளாதாரத் தடைகள் மற்றும் தற்போது அதன் முன்னாள் தலைவர் ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக முன்னோடியில்லாத கொலைக் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளது.

கியூபாவுடன் அமைதி உடன்பாடு ஏற்படுவது சாத்தியமில்லை என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இது அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு “மோசடியான வழக்கு” என கியூபா குற்றம்சாட்டுகிறது.

ஆனால், கியூபா மீது அமெரிக்கா இத்தகைய அழுத்தத்தை பிரயோகிப்பதன் பின்னணியில் உள்ள தூண்டுதல் என்ன, இதற்கு அந்நாடு எவ்வாறு பதிலடி கொடுத்து வருகிறது?

கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா?

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை அதிபராக பதவியேற்ற பிறகு கியூபாவின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை டொனால்ட் டிரம்ப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, கியூபா “வீழ்வதற்குத் தயாராக” உள்ளது என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

By admin