• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

கோலி – டிராவிஸ் ஹெட் விவகாரம் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?

Byadmin

May 25, 2026


பெங்களுரு, ஹைதராபாத், விராட் கோலி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டிராவிஸ் ஹெட் கைகுலுக்க முன்வந்தபோது விராட் கோலி கைகுலுக்காமல் சென்றது விவாதப் பொருளாகியுள்ளது.

ஹைதராபாத் மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் உடன் விராட் கோலி கைகுலுக்காமல் சென்றது விவாதப் பொருளாகியுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள் இந்த நிகழ்வை விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி வெள்ளிக்கிழமை (மே 22) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

போட்டியின்போது கூட டிராவிஸ் ஹெட் மற்றும் விராட் கோலி இடையே நிறைய சைகைகள் பரிமாறப்பட்டிருந்தாலும் போட்டி முடிந்த பிறகு கைகுலுக்குவதற்கு டிராவிஸ் ஹெட் முன்வந்தபோது விராட் கோலி அதை புறந்தள்ளிவிட்டு கடந்து சென்றார்.

கம்மின்ஸ் மற்றும் அபிஷேக் சர்மா உடன் கைகுலுக்கிய கோலி ஹெட் உடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

By admin