• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்தியதாக முதன் முறையாக அறிவிப்பு

Byadmin

Sep 15, 2026


விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை முதன்முறையாக உறுதிப்படுத்திய அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்

    • எழுதியவர், கிறிஸ் கிரஹாம்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு ஆயுதத்தை நிலைநிறுத்தியதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இத்தகைய தாக்குதல் திறன்களை அது ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

எதிரிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதற்கு சுற்றுப்பாதையில் உள்ள இந்த ஆயுதம் அவசியமானது என்று அமெரிக்க விமானப் படைச் செயலாளர் டிராய் மெய்ங்க் தெரிவித்தார்.

திங்களன்று நடைபெற்ற வான், விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் பேசிய மெய்ங்க், “வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை” எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், இந்த ஆயுதத்தின் திறன்கள் குறித்தோ அல்லது இது எப்போது சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது என்பது குறித்தோ அவர் விவரங்களை வெளியிடவில்லை.

எதிர்கால மோதல்களில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்கவும், அவற்றை முடக்கவும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் திட்டங்களை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டு, விண்வெளியில் தங்களது ராணுவத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் “ஆயுதப் போட்டியில்” ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்து சீனா செவ்வாய்க்கிழமை பதிலளித்தது.

By admin