• Wed. Apr 15th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா வெனிசுவேலா கச்சா எண்ணெயை என்ன செய்கிறது?

Byadmin

Apr 15, 2026


வெனிசுவேலா எண்ணெய் இருந்தும் இரான் போரால் அமெரிக்கா அதிர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

மெக்சிகோ வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களுக்கு மிக அருகில், மிசிசிப்பி சவுண்டில் உள்ள ஒரு கப்பல்துறையில் ‘மினெர்வா குளோரியா’ கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

இந்தக் கப்பல், வெனிசுவேலாவிலிருந்து ஒரு விலைமதிப்பற்ற சரக்கைச் சுமந்து வந்துள்ளது. சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு வரை இதை அமெரிக்காவிற்குக் கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. அதில் 400,000 பேரல் கச்சா எண்ணெய் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டது வெனிசுவேலா.

அந்நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கீழ், முதலீடு இல்லாத காரணத்தால் எண்ணெய் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்து போனது. அதன் பிறகு அந்த லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது.

ஆனால், ஜனவரி மாதம் ஓர் இரவு நேரத் திடீர் தேடுதல் வேட்டையில் அமெரிக்க ராணுவம் மதுரோவை சிறைபிடித்த பிறகு, அந்த எண்ணெய் இருப்புக்களைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார்.

By admin