• Tue. Sep 24th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா? மீம், வீடியோ வைரலாவது ஏன்?

Byadmin

Sep 24, 2024


அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

  • எழுதியவர், ஐயோன் வெல்ஸ், ஜெஸிகா க்ரூஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள லத்தீன் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஒரு மிகப்பெரிய கேள்வி அல்லது சந்தேகம் என்னவென்றால், கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா என்பது தான்.

“ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் பற்றிய பல்வேறு விதமான தவறான செய்திகள் மக்கள் மத்தியிலும் இணையத்திலும் வலம் வர ஆரம்பித்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று அவர் சோஷலிஸ்ட்டா அல்லது கம்யூனிஸ்ட்டா என்பதுதான்” என்கிறது ஸ்பானீஷ் மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் உண்மை அறியும் நிறுவனமான ஃபேக்ட்செக்யூடோ (Factchequeado).

கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் அடக்குமுறைக்கு ஆளாகி அங்கிருந்து இடம் பெயர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மக்களின் அச்சத்தை மேலும் அதிகரிப்பது போல் இது போன்ற செய்திகள் அமைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கமலா ஹாரிஸின் கொள்கை சார்ந்து வெளியாகும் மீம்கள், வைரல் வீடியோக்களில் சமீபமாக அனைவராலும் பேசப்பட்டது, தீவிர இடதுசாரி கட்சியான அமெரிக்காவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் (Revolutionary Communists of America) சின்னத்தின் முன்பு கமலா ஹாரிஸும் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிம் வால்ஸும் நின்றிருக்கும் வீடியோ தான்.

By admin