• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப், நவோமி ஒசாகா

Byadmin

Sep 6, 2026


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று நடந்த போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிறிஸ்டினா புக்சாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

By admin