• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய இரான் – பதிலடியாக கெஷ்ம் தீவைத் தாக்கிய அமெரிக்கா

Byadmin

Jun 3, 2026


அமெரிக்கா தங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் இரானிய எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறுகிறது.

பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படையைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறுகிறது (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேற்று நள்ளிரவு அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு மற்றும் அமெரிக்க வான்படைத் தளம் ஆகியவற்றை, தான் இலக்கு வைத்ததாக இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் இரானிய எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறுகிறது.

இதற்கிடையில், இரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைத் தான் இடைமறித்து அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

பிபிசி பெர்சியன் செய்தியின்படி, “பிராந்தியம் முழுவதும் தாக்குதல் நடத்த இரான் மேற்கொண்ட முயற்சிகளுக்குப்” பதிலடியாக, கெஷ்ம் தீவில் உள்ள சில இலக்குகளுக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக செண்ட்காம் கூறியுள்ளது.

இதற்கு முன்பு இரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காலியான எண்ணெய் கப்பலைத் தான் இலக்கு வைத்ததாக அமெரிக்கா கூறியிருந்தது.

By admin