• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

டெல்லி உணவக தீ விபத்து : பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு

Byadmin

Jun 3, 2026


டெல்லியின் மால்வியா நகரில் உள்ள லெமன் கிரீன் உணவகத்தில் காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 20-ஆக உயர்ந்துள்ளது.

தீவிபத்து ஏற்பட்ட ஆறு மாடிக் கட்டிடத்தில் ஃப்ளோரிஸ் ஸ்டே ஹோட்டல் இயங்கி வந்தது. இன்று காலை கட்டிடத்தின் அடித்தளத்தில் முதலில் பிடித்த தீ மளமளவென மேல் தளங்களுக்கு பரவியதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீவிபத்து ஏற்பட்ட அடித்தளத்தில் இருந்து 3 பேர் உட்பட கட்டிடத்தில் இருந்து சுமார் 44 பேரை மீட்டுள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

By admin