• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

அமைச்சர் கீர்த்தனாவுடன் ஒப்பிட்டு வெளியான வீடியோவில் உள்ள பெண் மலேசிய யார்?

Byadmin

Aug 26, 2026



'அமைச்சர் கூறிய கருத்தும் வருத்தமாக இருந்தது' - கீர்த்தனாவுடன் ஒப்பிட்டு வெளியான வீடியோ; மலேசிய பெண் பிபிசியிடம் கூறியது என்ன?

பட மூலாதாரம், X/Keerthana4VNR, vinosha ravi

“என்னுடைய காணொளி வெளியான பின்பு நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் எனக்கு எதிராக உருவ கேலி அதிகளவில் நடக்கிறது. இதனால் மனமுடைந்து அழுதேன்,” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வினோஷா ரவி.

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை குறிவைத்து இணையத்தில் நடைபெறும் கேலிகள், ட்ரோல்கள் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் வினோஷா ரவி வரை நீண்டுள்ளது. தன்னுடைய காணொளியை யாரோ ஒருவர் அமைச்சர் கீர்த்தனா எனக்கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து, தனக்கு இணையத்தில் ட்ரோல்கள் அதிகரித்துள்ளதாக வினோஷா ரவி கூறுகிறார்.

சமீபத்தில் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமைச்சர் கீர்த்தனா எனக்கூறி பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் காணொளி வைரலானது. பலரும் சமூக வலைதளங்களில் அப்பெண் அணிந்திருக்கும் உடையை குறிப்பிட்டு அமைச்சர் கீர்த்தனாவை தொடர்புப்படுத்தி அவர் மீது இணைய தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஆனால், அந்த காணொளியில் இருப்பது தான் அல்ல என அமைச்சர் கீர்த்தனா தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆனால், அது “நானாகவே இருந்திருந்தாலும், அதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை இன்றும் ஏன் பொதுவெளியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன?” என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

By admin