• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

Byadmin

Jun 3, 2026


இந்நலவரியங்கள் துவங்கப்பட்ட நாளிலிருந்து 01.06.2026 வரை 47,45,765 தொழிலாளர்கள் இந்த வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, விபத்து ஊனம், விபத்து மரணம், இயற்கை மரணம். ஈமச்சடங்கு மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று (02.06.2026) சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வு மேற்கொண்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சார்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டதவிகளை வழங்கினார்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இவ்வாரியங்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நலத்திட்ட உதவிகள் முறையான பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைய எதுவாக மென்பொருளை மேம்படுத்தி, துரிதமாக செயல்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

By admin