• Sat. Jun 27th, 2026

24×7 Live News

Apdin News

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு புகார்: கைது செய்யப்பட்ட 8 பேர் யார்?

Byadmin

Jun 27, 2026


அயோத்தி ராமர் கோயில், காணிக்கை திருட்டு வழக்கு, ஆலயம், விசாரணை அமைப்புகள், நிதி முறைகேடு

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ராமர் கோவிலின் காணிக்கையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன (கோப்புப் படம்)

அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) ஆரம்பகட்ட அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமையன்று (2026 ஜூன் 25) எட்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ராமர் கோவிலின் உண்டியல்களில் இருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அயோத்தி மூத்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஓரிரு நாட்களுக்குள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இவ்விவகாரம் தொடர்பான முழு உண்மையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்வேன் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “அயோத்தி குறித்து வந்த செய்திகளை அடுத்து, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கூறியிருந்தோம். அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தோம். அதேபோல, அந்த அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் முன்பே கூறியதைப்போல, இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

By admin