• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

அரசு பள்ளி ஆய்வு சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா – தொடர் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தவெக அரசு

Byadmin

Jul 7, 2026


'தலைமை கொடுத்த எச்சரிக்கை' : அமைச்சர் கீர்த்தனாவின் அரசுப் பள்ளி ஆய்வு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னணி

பட மூலாதாரம், X/Keerthana4VNR

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“அரசு அலுவலகங்களுக்கு தேவையில்லாமல் சென்று ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது”

சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வு ஏற்படுத்திய சர்ச்சைக்கு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

மாணவர்களின் ஆங்கில திறன் தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா எழுப்பிய கேள்விகள், அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தின.

த.வெ.க அரசு ஆட்சியமைத்ததில் இருந்து அரசு அலுவலகங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் ‘ஆய்வு’ என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சிவகாசியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கடந்த ஜூலை 2 ஆம் தேதி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

By admin