• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி: தலைநகரில் இரு குண்டுவெடிப்புகள்!

Byadmin

Jul 7, 2026


சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரு குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன.

செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த இக்குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, நகரின் வான்பரப்பில் அடர்ந்த புகைமூட்டம் எழும்புவதைக் காட்டும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு பகுதியிலேயே இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை ஒரு “குற்றச்செயல்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ஆகியவற்றுக்கு அருகிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பின் போது வாகனம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா (Ahmed al-Sharaa) உடனான சந்திப்புக்காகச் சென்று கொண்டிருந்த ஜனாதிபதிர் மக்ரோனுக்கு இந்தக் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்கவில்லை என்றும், திட்டமிட்டபடி அவரது சிரிய விஜயம் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டமாஸ்கஸின் மத்திய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டதோடு, 20 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin