• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

அர்னாப்: 140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் நேரிடலாம்? ஆந்திரா ஆயத்தம்

Byadmin

Oct 26, 2026


140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் ஏற்படலாம்? அர்னாப் புயலுக்கு ஆயத்தமாகும் ஆந்திரா

படக்குறிப்பு, கோப்புப் படம்

    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

வங்கக்கடலில் உருவான புயல் மேலும் வலுப்பெற்றுள்ளதாக விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாக விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குநர் பி.எல்.என். மூர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.

திங்கள்கிழமை நள்ளிரவுக்குள் இது தீவிரப் புயலாகவும், செவ்வாய்க்கிழமை மிக தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்று பி.எல்.என். மூர்த்தி தெரிவித்தார்.

புதன்கிழமை காலை பாபட்லாவுக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்களிலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆந்திரப் பிரதேச மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.



By admin