• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

‘அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்’: திமுக – அதிமுக கூட்டணி குறித்த எழுந்த ஊகமும் எம்.எல்.ஏ.க்களின் பதிலும் என்ன?

Byadmin

May 8, 2026


திமுக - அதிமுக கூட்டணி

பட மூலாதாரம், MKStalin/X

”கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால்தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரம் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படுகிறது” இன்று நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று இதுவாகும்.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கப்போகிறது என்று பரவிய ஊடக செய்திகளுக்கு மத்தியில் இந்த தீர்மானம் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

“கட்சியின் தலைவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம்” என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

“திமுக – அதிமுக கூட்டு சேர உள்ளதாக வெளியான செய்தியை எந்த கட்சி தலைவர்களும் மறுக்காதபோது அதில் உண்மை இருக்கக்கூடும்” என பத்திரிகையாளர்களும் கருதுகின்றனர்.

தனிப்பெரும் கட்சி தவெக

தவெக தலைவர் விஜய்

பட மூலாதாரம், TVKHQ/X

படக்குறிப்பு, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்

சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவானாலும் பெரும்பான்மை இல்லாததால் அவர்களால் ஆட்சியமைக்க முடியவில்லை. 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

By admin