அகாடமி விருதுகளை வென்ற படைப்பாளி ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ அவதார் ஃபயர் & ஆஷ் ‘ எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் சீகோர்னி வீவர், ஸ்டீபன் லாங் , ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி ப்ளீஸ் , ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ், கதே வின்ஸ்லெட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் அவதார் ஃபயர் & ஆஷ் எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் புதிய சாகசங்களுக்காக பண்டேரா உலகிற்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பார்வையாளர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறார். அத்துடன் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் வழக்கம் போல் சர்வதேச தரத்தில் அமைந்திருப்பதால் பார்வையாளர்கள் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.
The post அவதார் ஃபயர் & ஆஷ்’ ஹொலிவுட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.