• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

ஆகாஷின் உடல் 100 நாட்களுக்குப் பின் தகனம் – குடும்பத்தினர் எதிர்ப்பது ஏன்?

Byadmin

Jun 18, 2026


ஆகாஷ் டெலிசன், தமிழக அரசு, மதுரை
படக்குறிப்பு, ஆகாஷ் டெலிசன்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த ஆகாஷ் டெலிசனின் உடல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து இன்று (ஜூன் 17) தகனம் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 5-ஆம் தேதி ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.

தப்பிச் செல்ல முயன்றபோது டெலிசனுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது. ஆனால் அவர் காவல்துறையால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவரது குடும்பத்தினர், ஆகாஷின் உடலை வாங்க மறுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலைப் பெறப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆகாஷ் டெலிசனின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகளை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு நேற்று (ஜூன் 16) அனுமதி அளித்தது.

By admin