• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

ஆகிப் நபி: இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ள ஜம்மு காஷ்மீர் வீரர் சாதித்தது என்ன?

Byadmin

Aug 4, 2026


ஆகிப் நபி, ஜம்மு காஷ்மீர், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வீரர் ஆகிப் நபி இந்தியாவுக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் அறிமுகமாகக்கூடும்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்ததை அடுத்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பும்ரா இன்னும் முழுமையாக குணமடையவில்லை, இதன் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்ட அறிக்கையில், ஆகிப் நபிக்கு முதன்முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகிப் நபி சிறப்பான ஆட்டம்

வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரான ஆகிப் நபி உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை சீசன்களில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி அவர் மொத்தம் 104 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

By admin