0
உலகிலேயே அதிக ஆங்கிலப் புலமை கொண்டவர்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அயர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சமீபத்திய பட்டியலின்படி, 98.37 சதவீத அயர்லாந்து மக்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 98 சதவீத மக்கள் ஆங்கில மொழியைப் பேசுகிறார்கள்.
ஐஸ்லாந்து (98%) மற்றும் நியூசிலாந்து (97.82%) ஆகியன முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
ஜமைக்கா (97.64%) ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் (96.43%) ஆறாவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா (95.5%) மற்றும் ஆஸ்திரேலியா (92.8%) ஆகியன முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்திலும் உள்ளன.
நெதர்லாந்து (90.9%) ஒன்பதாவது இடத்திலும், கயானா (90.55%) பத்தாவது இடத்திலும் உள்ளன.
பட்டியல் விவரம் :
1. அயர்லாந்து – 98.37%
2. ஐக்கிய இராச்சியம் – 98%
3. ஐஸ்லாந்து – 98%
4. நியூசிலாந்து – 97.82%
5. ஜமைக்கா – 97.64%
6. சிங்கப்பூர் – 96.43%
7. அமெரிக்கா – 95.5%
8. ஆஸ்திரேலியா – 92.8%
9. நெதர்லாந்து – 90.9%
10. கயானா – 90.55%