• Mon. Jul 28th, 2025

24×7 Live News

Apdin News

ஆசிய கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி அறிவிப்பால் என்ன சர்ச்சை?

Byadmin

Jul 28, 2025


ஆசிய கோப்பை டி20, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன (கோப்பு படம்)

இந்தியா – பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) 2025ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்தியா நடத்தும் இந்த ஆசிய கோப்பை போட்டித்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டிகளாக நடத்தப்படும். செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் 2025 ஆசிய கோப்பை போட்டித்தொடர், செப்டம்பர் 28ஆம் தேதி நிறைவடையும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் களம் காண்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வந்தால், இரு அணிகளும் மேலும் ஒரு போட்டியில் விளையாட வேண்டியிருக்கும்.

கடந்த மே மாதத்திற்குப் பிறகு, இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, சமூக ஊடக பயனர்களில் பலரும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

By admin