• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய பரா விளையாட்டுப் போட்டி சாதனைகளுடன் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்

Byadmin

Oct 24, 2026


ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இரண்டு நிகழ்ச்சிகளில் போட்டி சாதனைகளுடன் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு கிடைத்த முதல் இரண்டு தங்கப் பதக்கங்கள் இவையாகும்.

T46 வகைப் பிரிவு ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 03.25 செக்கன்களில் ஓடி முடித்த இலங்கை மாற்றுத்திறனாளி ப்ரதீப் சோமசிறி ஆசிய பரா விளையாட்டு விழா போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தீவுகள் ஆராயுங்கள்

 

T47 வகைப் பிரிவு பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 5.52 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்தன் மூலம் இலங்கை மாற்றுத்திறனாளி ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்கவும் புதிய ஆசிய பரா விளையாட்டு விழா போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இப் போட்டியில் பங்குபற்றிய மற்றொரு இலங்கை மாற்றுத்திறனாளி சந்துனி சுவர்ணமாலி ஜயசுந்தர (4.11 மீற்றர்) நான்காம் இடத்தைப் பெற்றார்.

By admin