• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – அஜர்பைஜான் கலாசார தொடர்பை விவரிக்கும் அடேஷ்கா அக்னி கோயிலின் வரலாறு

Byadmin

Oct 24, 2026


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானின் அதேஷ்கா அக்னி கோயிலுக்குச் சென்றார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை, அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள அடேஷ்கா அக்னி கோயிலுக்கு எஸ். ஜெய்சங்கர் சென்றார்.

இந்தப் பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், “பாகுவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அடேஷ்கா அக்னி கோயிலுக்குச் சென்றேன். இது நமது இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசாரத் தொடர்புகளின் அடையாளமாக விளங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய நாடான அஜர்பைஜானின் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாடு முன்பு சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இங்குள்ள, சுரகானி அருகே அமைந்துள்ள அடேஷ்கா அக்னி கோயிலில் தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீ கணேஷாய நமஹ” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.



By admin