• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் நேருக்கு நேர் – காங்கிரஸ், சிஜேபி விமர்சிப்பது என்ன?

Byadmin

Oct 24, 2026


இந்தியா - சீனா எல்லை

படக்குறிப்பு, அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் கவலைக்குரியதாக இருப்பதாக, ஐடிபிபி தலைமை இயக்குநர் சத்ருகன் கபூர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அருணாச்சல பிரதேச எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) தலைமை இயக்குநர் அளித்த அறிக்கையை முன்னிறுத்தி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்துள்ளன.

இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் (டி.ஜி.) சத்ருகன் கபூர் வியாழக்கிழமை பேசியபோது, “கடந்த சில நாட்களாக அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் இரு தரப்பினரும் (இந்தியா மற்றும் சீனா) நேருக்கு நேர் மோதும் நிலை உருவானது. இந்த நிலைமை இன்னும் தொடர்கிறது” என்றார்.

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வடகிழக்கு எல்லையில் பதற்றம் தொடங்கியதில் இருந்து, இந்த நிலைமை குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறை.

அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள அசாபிலா மற்றும் மாஜா பகுதிகளில் ஜூலை மாத இறுதியிலிருந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சி, மோதி அரசைக் குறிவைத்து, “இந்த மிகக் கடுமையான பிரச்னை குறித்து பிரதமரும் அவரது முழு நிர்வாக அமைப்பும் மௌனமாக உள்ளது” என்று கூறியுள்ளது.



By admin