• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

கொடைக்கானல் சாலை துண்டிப்பு: மண் சரிவு மற்றும் கனமழையால் கிராம மக்கள் கடும் பாதிப்பு. Kodaikanal Road Blocked: Landslides and heavy rains disrupt transport, affecting villagers.

Byadmin

Oct 24, 2026


கோரிக்கை

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த குழுவினர் பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மழை நீடித்து வரும் நிலையில் குறைவான அலுவலர்களே இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொடைக்கானலின் பிரதான சாலையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள், போதிய வடிகால் வசதி இல்லாதது போன்றவற்றால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ெதாடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

By admin