• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

ராவண வதம் இல்லை, 76 நாட்கள் கொண்டாட்டம் – தனித்துவமான தசராவின் 600 ஆண்டுக்கால மரபு

Byadmin

Oct 24, 2026


ராவண தகனம், தசரா, பஸ்தர் தசரா பண்டிகை

படக்குறிப்பு, பஸ்தர் தசரா பண்டிகையின் தனிச்சிறப்பு, இதில் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதுதான்

    • எழுதியவர், அலோக் புத்துல்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பஸ்தர் தசரா பண்டிகையின் தனிச்சிறப்பு, இதில் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதுதான்.

இந்தியாவின் பிற பகுதிகளில் ராவணனின் உருவ பொம்மைகளை எரித்து தசரா பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் வனப்பகுதியில் பிரமாண்டமான மரத்தேர் பவனி வருகிறது. இங்கு ராம்லீலா நிகழ்ச்சிகளோ, ராவண வதமோ, அம்பில் இருந்து வில் எய்யும் சடங்குகளோ தசராவின்போது மேற்கொள்ளப்படுவதில்லை.

பஸ்தரில் தசரா என்பது பகவான் ராமர் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விழா அல்ல. மாறாக, இப்பகுதியின் காவல் தெய்வமாக வழிபடப்படும் அன்னை தந்தேஸ்வரியின் பெருமையைப் போற்றும் திருவிழா. இந்த விழா மொத்தம் 76 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவின் தனித்துவமான அம்சம், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட்டிருப்பதுதான். ஒரு கிராமத்தினர் தேருக்கான மரத்தை வழங்குகின்றனர், மற்றொரு கிராமத்தினர் தேரை இழுப்பதற்கான கயிறுகளைத் தயாரித்து வழங்குகின்றனர், இன்னொரு கிராமத்தினர் தேரை இழுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, விழா எவ்விதத் தடங்கலுமின்றி நடைபெற வேண்டி, ஒன்பது நாட்கள் ஒரு குழிக்குள் அமர்ந்து பிரார்தனை செய்யும் ‘யோகிகள்’ மற்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு தேருக்கான மரம் ஒரு கிராமத்தில் இருந்தும், கைவினைஞர்கள் வேறொரு கிராமத்தில் இருந்தும், கயிறுகள் மற்றொரு பகுதியில் இருந்தும் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல, ‘வெற்றித் தேரை’ இழுக்கும் உரிமை, கிலேபால் பர்கானாவை சேர்ந்த மரியா பழங்குடியின மக்களுக்கு மட்டுமே உரியதாக உள்ளது.



By admin