• Thu. Jul 17th, 2025

24×7 Live News

Apdin News

ஆடிக்கூழ்.. தமிழர் கலையும் பண்பாடும். – Vanakkam London

Byadmin

Jul 17, 2025


ஆடி மாசத்தில் எந்த நல்லகாரியமும் நம்மூர்களில் நடப்பதில்லை. இறந்தவர்களுக்கான ஆன்ம சாந்தி கிரியைகளை ஆடி அமாவாசையில் கீரிமலை போன்ற புனித நீர் நிலைகளில் உறவினர்கள் போய் செய்வது வழக்கம்.

தை மாசப் பிறப்பை தைப் பொங்கலாகவும், சித்திரை மாசப் பிறப்பை சித்திரை புத்தாண்டாகவும் கொண்டாடுவது போல் ஆடி மாதப் பிறப்பை ஆடிப்பிறப்பாக கொண்டாடுகிறோம் என்பது மட்டும் தெரியும்.

ஆடியில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யுமாம். அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர் ஆடிக் கூழ் இனிப்பானது. அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள்.

ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள்.
வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது. ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள்.

அந்த மாதத்திலேயே அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது. அதனால் தானோ என்னமோ கோவில்களில் ஆடி மாதத்தில் இந்த கூழ் காய்ச்சி வழங்குகிறார்களோ…..

By admin