• Mon. Jun 15th, 2026

24×7 Live News

Apdin News

ஆட்டி | திரைவிமர்சனம்

Byadmin

Jun 14, 2026


தயாரிப்பு : லட்சுமி கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : இசக்கி கார்வண்ணன், அபிநட்சத்திரா, ‘காதல்’ சுகுமார் , சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பலர்

இயக்கம் : த. கிட்டு

மதிப்பீடு : 2/ 5

சமூகத்தின் மீது அற சீற்றம் கொண்ட இன உணர்வாளரான இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆட்டி’. இந்தச் சொல்லுக்கு ‘தலைவி’, ‘முதன்மையானவள்’ என்ற பொருளை உணர்த்துகிறது என்றாலும்.இப்படம் அதனை எப்படி விவரிக்கிறது? என்பதை காண. ஆவலுடன் பட மாளிகைக்குள் சென்றவர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.

கடந்த பல தசாப்தங்களுக்கு முன் காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் அமைதி ராஜ் ( இசக்கி கார்வண்ணன்) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவசங்கரன் எனும் கைதியை மனித உரிமையை மீறி மரண தண்டனையை அளிக்கிறார். இதனால் துறை ரீதியிலான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அமைதி ராஜ் தேயிலை தோட்டங்கள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சிறிய காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்.  அங்கு பொறுப்பேற்க வரும் அமைதி ராஜ் அந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் அங்குள்ள காவல் நிலையத்தில் எந்த புகாரும் பதிவாகவில்லை.

இதன் காரணத்தினால் அங்கு பணியில் இருக்கும் விடியல் ( காதல் சுகுமார்) மற்றும் குப்புசாமி ( செல்வகுமார்) என்கிற கடைநிலை காவலர்கள் காவல் நிலையத்திலேயே குறட்டை விட்டு உறங்குவதும்.. வேலை இல்லாமல் சும்மா இருப்பதும் தொடர்கிறது. இந்த தருணத்தில் அங்கு வரும் அமைதி ராஜ் தனக்கு கீழ் பணி புரியும் காவலர்களிடம் ‘எமக்கு நாளாந்தம் புகார் வரவேண்டும்’ என உ

த்தரவிடுகிறார். இதனால் செய்வது அறியாமல் திகைக்கும் காவலர்கள் பழைய வழக்குகளை தூசு தட்டுகிறார்கள். இந்த தருணத்தில் அந்த மலை கிராமத்தில் ஓரளவு கல்வி கற்று அங்குள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கிறார் அழகு ( அபி நட்சத்திரா) என்ற இளம் பெண். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சில கற்றலுக்கான உபகரணங்களை சேகரித்து கல்வி கற்பித்து வரும் அவர், அரசிற்கு மாணவ மாணவிகளுக்கு கல்வி போதிக்க ஆசிரியர் ஒருவர் வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். இந்த கோரிக்கையை ஏற்று அரசாங்கம் செல்வம் ( பிரவீண் பழனிச்சாமி) எனும் ஆசிரியரை அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நியமி

க்கிறது.  ஆசிரியர் மாணவர்களின் எதிர்கால கல்விக்காக பாடுபட்டு வரும் இளம் பெண் அழகு மீது காமுறுகிறார். இதன் பிறகு அவர் சந்தேகத்திற்கு இடம்பணிக்கும் வகையில் மரணம் அடைகிறார். அவரது மரணம் அந்தக் காவல் நிலையத்தில் புகாராக பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்குகிறது. விசாரணையில் கண்டறிந்த உண்மை என்ன? அதற்கான மூலம் என்ன? கொலையாளி யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தார்களா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன.. என்பது குறித்து ஆய்வு செய்வதும். தமிழ் மரபில் அதிகமான குலதெய்வங்கள் பெண்மணிகளாக இருப்பதன் பின்னணி குறித்தும் விவரிக்கும் இந்த படைப்பு ..கால அளவில் குறுகியதாக இருந்தாலும், ரசிகர்களை சோர்வடையச் செய்யாமல் திரைக்கதை சுவாரசியத்துடன் நகர்கிறது.

சில விடயங்களை திரைமொழியில் விவரிக்காமல். பின்னணி குரல் மூலம் விவரிப்பதால், கதையில் சொல்ல வரும் விடயத்தின் வீரியம் குறைகிறது.

அமைதி ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் இசக்கி கார்லண்ணன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் மிடுக்கான தோற்றத்தில் இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது தடுமாற்றம் அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக கேரக்டரை ஹோல்ட் செய்வதில்….!?

அழகு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபி நட்சத்திரா…. செல்வம் எனும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் பழனிச்சாமி விடியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் சுகுமார் ஆகியோர் தங்களின் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்கள்.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு மற்றும் தீஸனின் பின்னணி இசை ஓகே ரகம்.

ஆட்டி – சக்கரக்கட்டி.

The post ஆட்டி | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin