• Mon. Jun 15th, 2026

24×7 Live News

Apdin News

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா – சரித்திரம் படைத்தார் தீப்தி ஷர்மா

Byadmin

Jun 15, 2026


மகளிர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Philip Brown/Getty Images

படக்குறிப்பு, மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார் தீப்தி

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

முதலில் பேட் செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் 17 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா சார்பில், ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடி 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களையும் 9 பவுண்டரிகளையும் அடித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் 36 ரன்கள் எடுத்தார்.

தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம், ஸ்ரீ சரணி 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

By admin