• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

ஆண்கள் இரவில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானதா? தெரிந்துகொள்ள வேண்டியவை

Byadmin

Jun 18, 2026


சில நேரங்களில் இது இரவில் அதிக தண்ணீர் குடிப்பது, காஃபின் அல்லது ஆல்கஹால் அருந்துவது போன்ற எளிய விஷயங்களால் ஏற்படலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரும்பாலான ஆண்கள் இந்தப் பிரச்னை தங்களது வயது காரணமாக ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள்.

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

இரவில் சிறுநீர் கழிப்பதற்காக ஒரு முறை எழுவது இயல்பானது என்று பலர் நினைக்கிறார்கள்.

தாங்கள் இரவில் தூங்கும் போது அதிக தண்ணீர் குடித்ததே இதற்குக் காரணம் என்று அவர்கள் பெரும்பாலும் கருதுகிறார்கள்.

ஆனால் இது வழக்கமாகி, ஒவ்வொரு இரவும் இரண்டு அல்லது மூன்று முறை எழ வேண்டிய நிலை ஏற்பட்டால், இதை அலட்சியப்படுத்தக் கூடாது.

மருத்துவ ரீதியாக, இது ‘ நாக்டூரியா’ (nocturia ) என்று அழைக்கப்படுகிறது. இது நமது உடலில் ஏதோ கோளாறு இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.

By admin