• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

ஆந்திராவில் தொடர் கொலை வழக்கில் தாய், மகனை காவல்துறை கைது செய்தது எப்படி?

Byadmin

Aug 18, 2026


குற்றம் சாட்டப்பட்ட ராஜிதா

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட ராஜிதா ஒரு பெட்ரோல் நிலையத்தில் பைக்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார்.

    • எழுதியவர், பிரவீன் சுபம்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கலாம்)

தனது மகனை ‘பாடி பில்டராக’ பயிற்றுவித்து, அவரது உதவியுடன் தொடர் கொலைகளில் ஒரு தாய் ஈடுபட்டுள்ளார். அந்த தாயையும், மகனையும் கைது செய்துள்ளதாக சித்திபேட்டை ஆணையரக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“தொலைதூரப் பகுதியில் இந்தக் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட விதம் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு உள்ளது” என்று சித்திபேட்டை காவல் ஆணையர் ராஷ்மி பெருமாள் தெரிவித்தார்.

“குற்றங்களைச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்கான வழிகள் குறித்து தாயும் மகனும் இணையத்தில் ஆய்வு செய்துள்ளனர்” என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.

ஏற்கெனவே இரண்டு பெண்களைக் கொலை செய்து, அதன் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்த அவர்கள், அடுத்ததாக கொலை செய்ய வேண்டிய பட்டியலில் மேலும் நான்கு பேரை வைத்திருந்ததாகவும், அதற்குள் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

By admin