• Wed. Oct 14th, 2026

24×7 Live News

Apdin News

ஆந்திராவில் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு; இருவரும் என்ன பேசினர்?

Byadmin

Oct 14, 2026


விஜய் ஆந்திரா பயணம், சந்திரபாபு நாயுடு - விஜய் சந்திப்பு

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆந்திரா சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார். அப்போது, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து புன்னமி காட் பகுதியில் நடைபெறும் ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். முன்னதாக, விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா கோயிலில் அவர் வழிபட்டார்.

ஆந்திரா சென்ற தமிழக முதலமைச்சர் விஜயை தெலுங்கு திரையுலகின் நட்சத்திர தம்பதியரான நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சந்தித்தனர்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, ஆந்திர முதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்

தமிழக அரசு தெரிவித்தது என்ன?

தமிழக முதலமைச்சர் விஜயின் ஆந்திர பயணம் குறித்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஜோசப் விஜய் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும், சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது, இரு மாநிலங்களுக்கிடையேயான சிறந்த ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் இந்த நல்வாய்ப்பிற்கும், விஜயவாடாவில் அளிக்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்கும் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சருக்கு விஜய் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுவான நலன் சார்ந்த விவகாரங்கள், குறிப்பாக, நீர்ப் பாதுகாப்பு தொடர்பான பொருண்மைகளில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.”

By admin