• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

ஆபரேஷன் ஸ்னோபிட்ச்: 42 ஆண்டு வழக்கில் 2 சகோதரர்கள் சிக்கியது எப்படி?

Byadmin

Aug 3, 2026


1984ஆம் ஆண்டு மே மாதம் வடக்கு லண்டனில் உள்ள ஒரு சந்து பகுதியில் ஆண்டனி லிட்லர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் - இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தப்பித் திரிந்தனர்.

பட மூலாதாரம், Family photo

படக்குறிப்பு, 1984ஆம் ஆண்டு மே மாதம் வடக்கு லண்டனில் உள்ள ஒரு சந்து பகுதியில் ஆண்டனி லிட்லர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் – இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தப்பித் திரிந்தனர்.

    • எழுதியவர், கய் லின்
    • பதவி, லண்டன் இன்வெஸ்டிகேஷன்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

1984-ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, குடிமைப் பணியாளரான ஆண்டனி லிட்லர், ஈஸ்ட் ஃபின்ச்லி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி, தனது வீட்டை நோக்கி இருண்ட சந்து ஒன்றில் நடந்து சென்றார்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, 45 வயதான அவர் தரையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

தனியாக வாழ்ந்த, ரியல் ஏல் (real ale) பீர் வகையை விரும்பிய ஆண்டனி, தனது நண்பர்களால் “மென்மையான மனம் கொண்ட ராட்சதர்” (gentle giant) என்று வர்ணிக்கப்பட்டார். அவரது தலையில் இரண்டு முறை தாக்கப்பட்டது. அவரிடமிருந்து எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் இல்லை. தடயவியல் ஆதாரங்களும் இல்லை. கொலைக்கான தெளிவான நோக்கமும் கண்டறியப்படவில்லை.

42 ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலை வழக்கில் யாரும் தண்டிக்கப்படாமல் இருந்தது.

By admin