• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

நியூசிலாந்தில் இருந்து 150 கிரேஹவுண்ட் நாய்கள் தனி விமானத்தில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளன ஏன்?

Byadmin

Aug 3, 2026


நியூசிலாந்து, கிரேஹவுண்ட், பந்தயத் தடை, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Phil Walter/Getty Images

நியூசிலாந்தில் கிரேஹவுண்ட் நாய் பந்தய விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், 150-க்கும் மேற்பட்ட கிரேஹவுண்ட் நாய்களை ஏற்றிச் செல்லும் குறைந்தது இரண்டு சார்ட்டர் விமானங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளன.

புதிய தடையை தொடர்ந்து, நியூசிலாந்தில் உள்ள பல கிரேஹவுண்ட் பயிற்சியாளர்கள் தங்களது நாய்களை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றி, அங்கு இந்த விளையாட்டைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக, கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து அமைப்பு பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து முழுவதும் சனிக்கிழமை முதல் இந்தத் தடை அமலுக்கு வந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிரேஹவுண்ட் பந்தயம் இன்னும் சட்டபூர்வமாகவே உள்ளது.

இந்தத் தடை முதன்முதலில் 2024 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2025 ஏப்ரலில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தடையால் நியூசிலாந்தில் சுமார் 1,400 கிரேஹவுண்ட் நாய்கள் பந்தய வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற உள்ளன. அவற்றுக்கு புதிய பராமரிப்பு இல்லங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் கிரேஹவுண்ட் நாய்கள் “செல்லப்பிராணிகள்” என்ற வகையில் வகைப்படுத்தப்படுவதாகவும், அவை ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் தொடர்பாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin