• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

முதல் காதல் ஏன் மனதில் அழியாமல் நிற்கிறது? மூளை சொல்லும் அறிவியல் காரணம்

Byadmin

Aug 3, 2026


வல்லுநர்களின் கூற்றுப்படி முதல் காதலின் நினைவுகள் பல ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வல்லுநர்களின் கூற்றுப்படி முதல் காதலின் நினைவுகள் பல ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பலருக்கு, முதல்முறையாகக் காதலில் விழுவது வாழ்க்கையின் மிகவும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும்.

ஆனால், முதல் காதலும் முதல் உறவும் பல தசாப்தங்கள் கடந்த பிறகும் மூளையில் ஏன் பசுமையாகவே இருக்கின்றன? அந்தப் பருவத்தின் நினைவுகள் ஏன் அவ்வளவு ஆழமாக இருக்கின்றன, அவற்றை மறப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?

இதற்குக் காரணம், இளம் வயதில் மனித மூளை நீண்ட காலம் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்கும் திறன் அதிகமாக இருப்பதுதான்.

பலர் தங்களின் முதல் காதலை இளமைப் பருவத்தில்தான் அனுபவிக்கிறார்கள். மூளையின் வளர்ச்சியில் முக்கியமான இந்தக் காலகட்டத்தில், நினைவுகளை உருவாக்கி நீண்ட காலம் சேமித்து வைத்திருக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்.

“இந்த வயதில், நிகழ்வுகளை மிகத் துல்லியமாக மனதில் பதியவைத்து, அவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும் அபாரமான திறன் நமக்கு உள்ளது,” என்று வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியரான கேத்ரின் லோவி கூறுகிறார்.

By admin