• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

பெண்களுக்கு காதலை விட மரியாதையை அதிகம் கொடுங்கள் – ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா

Byadmin

Aug 3, 2026


‘கருப்பு’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46வது படமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் உருவாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கொண்டுள்ளது என டிரெய்லர் மூலம் அறிய முடிகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சூர்யா இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்தார்.

இந்த விழாவில் படத்தின் நாயகி மமிதா பைஜூ, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சுனில், நடிகை ராதிகா, இயக்குநர் அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா பெண்கள், அவர்கள் மீதான காதல் மற்றும் மரியாதை குறித்து பேசியுள்ளார்.

By admin