• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

இந்திய வரைபடத்தில் விடுபட்ட வடகிழக்கு.. சுட்டிக்காட்டிய வீராங்கனை லவ்லினா – திருத்திக்கொண்ட ஸ்காட்லாந்து உணவகம்

Byadmin

Aug 3, 2026


ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் குத்துச்சண்டை அணி 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றது.

மிஸ்டர் சிங்ஸ் இந்தியா உணவகம்

இந்த வரலாற்று சாதனையை கொண்டாடும் வகையில், கிளாஸ்கோ நகரில் உள்ள ‘மிஸ்டர் சிங்ஸ் இந்தியா’ என்ற உணவகத்திற்கு இந்திய வீரர் வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

கிளாஸ்கோவில் மிகவும் பிரபலமான ‘மிஸ்டர் சிங்ஸ் இந்தியா’ உணவகம், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கியப் பிரபலங்கள் பலர் வந்து செல்லும் உணவகமாகும்.

நேற்று 75 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை லவ்லினா போர்கோஹைனும் சென்றுள்ளார்.

உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் மற்றும் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுவிக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்துள்ளார்.

By admin