• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் விமான விபத்துக்கு முந்தைய சில விநாடிகளில் இரு விமானிகளும் பேசிக் கொண்டது என்ன?

Byadmin

Jul 12, 2025


ஆமதாபாத் விமான விபத்து, முதல் கட்ட விசாரணை அறிக்கை, ஏர் இந்தியா

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, கேப்டன் சுமித் சபர்வால் (இடது) இணை விமானி க்ளைவ் குந்தர் (வலது)

ஆமதாபாத் விமான விபத்து நடந்து சரியாக ஒரு மாதத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கை ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) இந்த அறிக்கையை வெளியிட்டது.

சனிக்கிழமை அதிகாலை வெளியான இந்த அறிக்கையில் அந்த விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடலும் இடம் பெற்றுள்ளது. விமானிகள் அறையில் அமைந்துள்ள ஒலிப்பதிவு கருவியில் இருந்து இந்த உரையாடல் மீட்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே விமானத்தின் 2 என்ஜின்களும் செயலிழந்துவிட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சமயத்தில் விமானிகள் இருவரும் பேசிக் கொண்டது என்ன? அறிக்கையில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ன? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

By admin