• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் விமான விபத்தை தவிர்த்திருக்க முடியுமா? முதல் கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் எழும் கேள்விகள்

Byadmin

Jul 14, 2025


ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா, முதல் கட்ட விசாரணை அறிக்கை
படக்குறிப்பு, இனாயத், அவரது மனைவி நஃபீஸா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட படாசாப் சையத்தின் சகோதரர் இனாயத் சையதின் குடும்ப படம்

    • எழுதியவர், சமீரா ஹுசைன்
    • பதவி, பிபிசி தெற்காசியா செய்தியாளர்

கடந்த மாதம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை இம்தியாஸ் அலி ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். இந்த விபத்தில் அவரது சகோதரர், மைத்துனி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு வெளியான விபத்துகான காரணம் பற்றிய முதற்கட்ட விசாரணை அறிக்கையை அவர் கவனமாகப் படித்தார். அந்த அறிக்கை தனக்கு ஏமாற்றம் அளித்ததாக அவர் சொல்கிறார்.

“விமானிகளுக்கு இடையில் நடைபெற்ற கடைசி நிமிட உரையாடலைத் தவிர, விபத்துக்கான உண்மையான காரணத்தை சுட்டிக்காட்டும் எதுவும் அந்த அறிக்கையில் இல்லை,” என்கிறார் அவர்.

வரும் மாதங்களில் விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என இம்தியாஸ் அலி நம்புகிறார்.

By admin