• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் விமான விபத்தை படம்பிடித்த ஆர்யன், ஊரை விட்டு வெளியேறியது ஏன்?

Byadmin

Jun 14, 2026


ஆர்யன் அசாரி, ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா

பட மூலாதாரம், Pavan Jaishwal

படக்குறிப்பு, ஆர்யன் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன்

    • எழுதியவர், ராக்ஸி காக்டேகர் சாரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

17 வயதான ஆர்யன் இப்போது குஜராத்தின் சாபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த 2025 ஜூன் 12 அன்று ஆர்யன் ஆமதாபாத் வந்தடைந்த சில நிமிடங்களிலேயே, ஒரு விமானம் வானில் பறந்து செல்வதைக் கண்டார்.

ஆர்யன் அந்த விமானத்தை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார், ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். ஆர்யனின் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோதான், இந்த விபத்தின் ஒரே முக்கியமான காட்சி ஆதாரமாக மாறியது.

விபத்து நடந்த அடுத்த நாள், அதாவது 2025 ஜூன் 13 அன்று, பிபிசி குஜராத்தி ஆர்யனைக் கண்டறிந்து அவரை நேர்காணல் செய்தது. இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஆர்யன் இப்போது தனது கிராமத்தில் வசித்து வருகிறார்; ஆனால், தற்போதும் கூட அவர் விமானங்களை வீடியோ எடுப்பதற்கு அவர் இப்போது அச்சப்படுகிறார்.

ஆர்யன் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் சாபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில்தான் தனது 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், இப்போது கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு தயாராகி வருகிறார்.

பிபிசி குஜராத்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், கடந்த ஓராண்டில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆர்யன் பேசியுள்ளார். மேலும், தனது பகுதியில் தனக்குக் கிடைத்துள்ள ஒரு புதிய பட்டப்பெயரைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். இப்போதெல்லாம் அவருடைய நண்பர்களும் சுற்றியுள்ள மக்களும் அவரை ‘வீடியோ பாய்’ என்றே அழைக்கிறார்கள்.

By admin