• Sun. Jun 14th, 2026

24×7 Live News

Apdin News

ஓடிடி-க்கு வருகிறார் ஜார்ஜ் குட்டி.. 'திரிஷ்யம் 3' எங்கு, எப்போது பார்க்கலாம்?

Byadmin

Jun 14, 2026


மோகன்லால் நடித்த சஸ்பென்ஸ் திரில்லர் படமான ‘திரிஷ்யம் 3’ படம் கடந்த மே 21 திரையரங்குகளில் வெளியானது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, அவருக்கு மனைவியாக மீனாவும் நடித்துள்ளார்.

இப்படம் உலகளவில் ரூ.234.97 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.123 கோடிக்கு மேல் வசூலித்து இரண்டாவது அதிக வசூல் செய்த மலையாளப் படமாக இது திகழ்கிறது.

இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் தளம் கைப்பற்றிய நிலையும் வரும் ஜூன் 18 முதல் இப்படம் அத்தளத்தில் மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் காணக்கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin