• Mon. Jun 15th, 2026

24×7 Live News

Apdin News

ஆம்னியோசென்டெசிஸ்: கர்ப்பிணிகளுக்கு சில நேரம் இந்த சிறப்பு பரிசோதனை அவசியம் ஏன்?

Byadmin

Jun 15, 2026


ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை, மருத்துவம், கர்ப்பம், கருவுற்ற பெண், மரபணு, குரோமோசோம்

பட மூலாதாரம், Tannaz irani/FB

படக்குறிப்பு, 40 வயதில் இரண்டாவது குழந்தையைப் பெற்ற நடிகை தன்னாஸ் இரானி, அப்போது தனக்கு ஆம்னியோசென்டெசிஸ் பரிசோதனை செய்ய வேண்டியிருந்ததாகவும் கூறினார்

    • எழுதியவர், சரண்ஜித் கவுர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பாலிவுட் நடிகைகளான கத்ரீனா கைஃப், தீபிகா படுகோன், ஃபரா கான் அல்லது அமெரிக்க நடிகை ஹாலே பெர்ரி என நாற்பது வயதுக்கு மேல் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு உதாரணங்கள் பல உள்ளன.

நாற்பது அல்லது அதைவிட அதிக வயதிலான பெண்கள் தாயாக முடிவு செய்யும் காலம் இது.

இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான தன்னாஸ் இரானி, 30 முதல் 40 வயதுக்குள் குழந்தை பெற்றெடுப்பதில் உள்ள ஆபத்துகளைப் பற்றிப் பேசியுள்ளார்.

“எனக்கு 40 வயதாக இருந்தபோது இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு ‘ஆம்னியோசென்டெசிஸ்’ எனப்படும் பனிக்குட நீர் ஆய்வு பரிசோதனை செய்யப்பட்டது” என்று அவர் சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் கூறினார்.

பிறக்கப் போகும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் அல்லது ஏதேனும் முதுகெலும்பு தொடர்பான குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஏனெனில், இளவயதில் குழந்தை பெற்றுக் கொள்வதைவிட நாற்பது மற்றும் அதற்கு மேலான வயதில் குழந்தை பெற்றெடுக்கும்போது, ஆபத்துகள் அதிகமாக இருக்கும்.

By admin