• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஆரோக்கியமா… சுவையா… சுரைக்காய் இட்லி செய்யலாம் வாங்க…

Byadmin

Jul 3, 2025


உங்களுக்கு இட்லி பிடிக்கும் ஆனால் எத்தனை நாட்களுக்கு ஒரே மாதிரியான இட்லியை சாப்பிடுவது என்று சலிப்பாக உள்ளதா? கவலையை விடுங்க… ஆரோக்கியமான இட்லி அதுவும் சுரைக்காய் இட்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

* சுரைக்காய் – 1

* இட்லி ரவை – 1 கப்

* பச்சை மிளகாய் – 1

* இஞ்சி – சிறிய துண்டு

* கொத்தமல்லி – சிறிது

* கறிவேப்பிலை – சிறிது

* துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – தேவைக்கேற்ப

* புளித்த மோர் – 1 கப்

தாளிப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:

* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.

* ஒரு கப் துருவிய சுரைக்காயுடன் 1 கப் ரவை சேர்க்க பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.

* பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .

* பின் சுரைக்காயுடன் தாளிப்பு மற்றும் புளித்த மோரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள ‘சுரைக்காய் இட்லி மாவை’ கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன இட்லியாக ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் இட்லி தயார்.

By admin