• Sat. May 23rd, 2026

24×7 Live News

Apdin News

ஆர்சிபி தோற்றாலும் முதலிடம்: பிளேஆஃபில் எஞ்சிய ஓரிடத்திற்கு 4 அணிகள் போட்டி

Byadmin

May 23, 2026


RCB vs SRH, ஐபில், கோலி, ரஜத் படிதார், க்ளாசன்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், நிதிஷ் எஸ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டிருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தை கிரிக்கெட் பாணியில் சொல்லவேண்டுமென்றால் டெட் ரப்பர். (Dead Rubber).

குறிப்பிட்ட ஒரு போட்டியின் வெற்றி தோல்வியால் தொடரின் முடிவுகளில் பெரிதாக மாற்றம் நடந்துவிடாது எனும் பட்சத்தில் அத்தகைய போட்டிகள் டெட் ரப்பர் என அழைக்கப்படும்.

ஆனால் நுணுக்கமாக பார்த்தால் நேற்றைய போட்டி இந்த இரு அணிகளுமே மிக முக்கியமானது. இந்தப் போட்டியில் பெங்களூரு மிக மோசமாக தோற்றால் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படலாம் என்கிற நிலை இருந்தது.

முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கே ப்ளே ஆஃப் சுற்றில் இரண்டாம் வாய்ப்பு கிடைக்கும். மூன்றாம் நான்காம் இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் போட்டி நாக் – அவுட் போட்டி. இதில் இன்னொரு தரவும் இருக்கிறது.

2011-இல் முதன்முறையாக இந்த ப்ளே ஆஃப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இப்போதுவரை ஒரே ஒரு சீசன் தவிர்த்து ஏனைய அனைத்து சீசன்களிலும் லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் மட்டுமே கோப்பையை கைப்பற்றியிருக்கின்றன. 2016 சீசன் மட்டும் விதிவிலக்கு. அந்த சீசனில் லீக் சுற்றில் மூன்றாமிடம் பிடித்த சன்ரைசர்ஸ் அணி கோப்பை வென்றது.

By admin