• Mon. Sep 28th, 2026

24×7 Live News

Apdin News

ஆர்.டி.ஐ-யில் சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்த சில மணி நேரத்தில் அரசாணை வாபஸ் – அதில் என்ன இருந்தது?

Byadmin

Sep 28, 2026


ஆர்.டி.ஐ-யில் சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்த சில மணி நேரத்தில் அரசாணை வாபஸ் - அதில் என்ன இருந்தது?

தமிழ்நாடு அரசின் கீழ் வரும் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்கிற அரசாணை வெளியான சில மணி நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணையில், பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை மாநில அரசால் நிறுவப்பட்ட ‘உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக’ குறிப்பிடப்படுவதாகவும் அந்தத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24-இன் கீழ் வரும் உள்பிரிவு 4-இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்தார்.

அரசாணையில் என்ன இருந்தது?

சட்டம் மற்றும் ஒழுங்கு துறையின் கீழ் வரும் பணிகளும் அரசாணையில் பட்டியலிடப்பட்டிருந்தன.

By admin