1
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இடம்பெற்றது.
இதன்போது பகிரங்க வாக்கெடுப்பு ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஆர்.பிரரேமதாச தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், உப தவிசாளராக அன்னாசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவின் தலைவரான தனம் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகர் கணேசபிள்ளை ரகுபதி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.