• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய் – நேரலை

Byadmin

May 6, 2026


தவெக, விஜய்

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

விஜய் உடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், செங்கோட்டையன், என்.ஆனந்த், அருண் ராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

தவெகவிடம் 108 இடங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன.

By admin